தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் திமுக வடக்கு மாவட்ட அலுவலகத்தில், தென்காசி திமுக வடக்கு மாவட்ட செயலாளர் மற்றும் சங்கரன்கோவில் சட்டமன்ற உறுப்பினர் ராஜா முன்னிலையில், அதிமுகவில் இருந்து விலகிய 50க்கும் மேற்பட்ட முக்கிய நபர்கள் திமுகவில் இணைந்துள்ளனர். அவர்களுக்கு சால்வை அணிவித்து வரவேற்பு அளிக்கப்பட்டது. இந்த நிகழ்வில் மேல நீலிதநல்லூர் கிழக்கு ஒன்றிய செயலாளர் பெரியதுரை, தென்காசி வடக்கு மாணவர் அணி துணை அமைப்பாளர் வீமராஜ், மேலநீலிதநல்லூர் திருக்கோன்றிய இளைஞரணி துணை அமைப்பாளர் சுனில் பிரபாகரன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.