தென்காசி மாவட்டம் சங்கரன்கோவிலில், சங்கரநாராயண சாமி கோவில் அருகே யாசகம் எடுத்து வாழ்ந்து வந்த பொன்னுச்சாமி என்ற முதியவரின் சுமார் 5000 ரூபாய் பணம், வேஷ்டி, சட்டை, போர்வை அடங்கிய பை மர்ம நபரால் திருடப்பட்டது. இது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து சங்கரன்கோவில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.