இலங்கை தமிழர்களுக்கான புதிய வீடுகள் திறந்து

376பார்த்தது
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் ஆத்தாடி பிள்ளையார் கோவிலில் உள்ள இலங்கை தமிழர்களுக்கான மறுவாழ்வு முகாமில், 32 புதிய வீடுகள் மற்றும் அடிப்படை வசதிகள் தென்காசி மாவட்ட ஆட்சியர் கமல் கிஷோர் தலைமையில் திறப்பு விழா நடைபெற்றது. இந்த விழாவில் தென்காசி திமுக வடக்கு மாவட்ட செயலாளர் மற்றும் சங்கரன்கோவில் சட்டமன்ற உறுப்பினர் ராஜா, தென்காசி நாடாளுமன்ற உறுப்பினர் ராணி ஸ்ரீகுமார் ஆகியோர் குத்துவிளக்கு ஏற்றி நிகழ்ச்சியை துவக்கி வைத்தனர். இதில் பலர் கலந்து கொண்டனர்.

தொடர்புடைய செய்தி