தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் திருநீலகண்ட ஊரணி அருகே அம்பேத்கர் நகரில் உழைப்பாளர் நலக்கூடத்தை தமிழக முதல்வர் தலைமை செயலகத்தில் இருந்து காணொளி காட்சி வாயிலாக திறந்து வைத்தார். பின்னர், தென்காசி மாவட்ட ஆட்சித் தலைவர் கமல் கிஷோர், சங்கரன்கோவில் சட்டமன்ற உறுப்பினர் ராஜா, பாராளுமன்ற உறுப்பினர் ராணி ஸ்ரீகுமார் ஆகியோர் குத்து விளக்கு ஏற்றி, ரிப்பன் வெட்டி திறந்து வைத்தனர். இந்த நிகழ்ச்சியில் கட்டுமான தொழிலாளர்களுக்கு நலவாரிய உதவித்தொகை வழங்கப்பட்டது. திமுக கட்சி நிர்வாகிகள் பலர் உடனிருந்தனர்.