தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே அழகாபுரி கிராமத்தில் வடக்கு பகுதியில் அமைந்துள்ள அன்னத்தி அம்மன் சுவாமி கோயிலுக்குச் சாமி தரிசனம் செய்ய பாதை வேண்டும் என ஒரு சமுதாயத்தினர் சங்கரன்கோவில் - திருவேங்கடம் சாலையில் நேற்று இரவு சுமார் 3 மணி நேரம் சாலை மறியலில் ஈடுபட்டனர். தகவல் அறிந்து வந்த திருவேங்கடம் போலீஸார் விளக்கம் கேட்டதை அடுத்து கிராம மக்கள் மறியலைக் கைவிட்டு கலைந்து சென்றனர்.