விசைத்தறி தொழிலாளர்கள் இன்று 2-வது நாளாக வேலை நிறுத்தம்

0பார்த்தது
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில், டி. என் புதுக்குடி, புளியங்குடி, சிந்தாமணி பகுதிகளில் உள்ள விசைத்தறி தொழிலாளர்கள், கூலி உயர்வு ஒப்பந்தத்தை அமல்படுத்தக் கோரி நேற்று முதல் தொடர் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். 16% கூலி உயர்வு ஒப்பந்தம் நிறைவேற்றப்பட்டும், 10% மட்டுமே வழங்கப்படுவதாகவும், விடுபட்ட 6% கூலியை உடனடியாக வழங்க வேண்டும் என்றும் தொழிலாளர்கள் வலியுறுத்துகின்றனர். இதனால் இரண்டாவது நாளாக நடைபெற்று வரும் வேலைநிறுத்தத்தால், ஒரு கோடி ரூபாய் மதிப்பிலான துணி உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது.