தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே மலையாங்குளம், கலிங்கப்பட்டி, திருவேங்கடம், நக்கலமுத்தன்பட்டி உள்ளிட்ட உப மின் நிலையங்களில், பராமரிப்பு பணிகள் காரணமாக செவ்வாய்க்கிழமை (நவ. 25) காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின் விநியோகம் தடைபடும். கோட்ட செயற்பொறியாளா் பாலசுப்பிரமணியம் இந்த தகவலை தெரிவித்துள்ளாா். இதனால் அப்பகுதிகளில் மின்சாரம் இருக்காது.