தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே களப்பாகுளம் கிராமத்தில், குடிநீர் குழாயை மூடும் அளவுக்கு உயரமாக அமைக்கப்பட்ட புதிய சிமெண்ட் சாலையால் கிராம மக்கள் 40 நாட்களுக்கும் மேலாக குடிநீர் பிடிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. விலை கொடுத்து தண்ணீர் வாங்கும் கிராம மக்கள் புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்காததால் வேதனை அடைந்துள்ளனர். சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக வந்து பார்வையிட்டு குடிதண்ணீர் குழாயை உயர்த்தி அமைத்து தர வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.