தென்காசி மாவட்டம் சங்கரன்கோவிலில் நேற்று இரவு ஜோதி முருகன் என்ற இளைஞர் மர்ம நபர்களால் வெட்டி படுகொலை செய்யப்பட்டார். இந்த கொலையை செய்த குற்றவாளிகளை உடனடியாக கைது செய்யக் கோரி, உறவினர்கள் சங்கரன்கோவில் பழைய பேருந்து நிலையம் அருகே சாலை மறியலில் ஈடுபட்டுள்ளனர். இதனால் அப்பகுதியில் பதட்டமும் பரபரப்பும் நிலவி வருகிறது. காவல்துறை தரப்பில் உறவினர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருகிறது.