சங்கரன்கோவில் ரேஷன் கடை ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

0பார்த்தது
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவிலில், தமிழ்நாடு அரசு நியாய விலை கடை பணியாளர் சங்கம் சார்பில் சம வேலைக்கு சம ஊதியம், எடையாளர் நியமனம், அத்தியாவசிய பொருட்களை பொட்டலமாக வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாநில துணைத்தலைவர் காளிராஜ் பாண்டியன் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில், மாவட்ட செயலாளர் முருகன், மாவட்ட துணை தலைவர் சங்கர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நிர்வாகிகள் பொன்ராஜ், சுப்புராஜ், முத்துப்பாண்டி, சங்கர், மாரியப்பன், இளங்கோ ஆகியோர் கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர்.

தொடர்புடைய செய்தி