தென்காசி மாவட்டத்தில் பல்வேறு காவல் நிலையங்களில் கஞ்சா, ஆயுத தடை சட்டம், கொலை முயற்சி, வன்கொடுமை தடுப்பு சட்டம், மிரட்டி பணம் பறித்தல் போன்ற வழக்குகளில் கைது செய்யப்பட்ட ஏழு குற்றவாளிகள் மீது தமிழ்நாடு குண்டர் தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அரவிந்த் பரிந்துரையின் பேரில், மாவட்ட ஆட்சியர் கமல் கிஷோர் உத்தரவின் பேரில் இந்த ஏழு பேரும் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டனர். இதில் வடகரை இஸ்மாயில், அருண்குமார், உக்கிரமசிங்கம், ராமகிருஷ்ணன், சுரேஷ், வசந்தகுமார் @ மயிலம்பாடி மற்றும் சரவண மகேஷ் ஆகியோர் அடங்குவர்.