தென்காசி மாவட்டம் சங்கரன்கோவிலில் உள்ள சங்கரநாராயண சுவாமி கோவிலில் நேற்று இரவு பக்தர்கள் சாமி தரிசனம் செய்து கொண்டிருந்தபோது, சுமார் 30க்கும் மேற்பட்ட குட்டி பாம்புகள் கோவிலுக்குள் புகுந்தன. இதனைக் கண்ட பக்தர்கள் அதிர்ச்சியடைந்தனர். உடனடியாக பாம்பு பிடி வீரர் பரமேஷ்தாஸுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. விரைந்து வந்த அவர், கோவில் முன்புறம் உள்ள பழனியாண்டவர் கோவில் கருவறையில் இருந்து 30க்கும் மேற்பட்ட குட்டிப் பாம்புகளைப் பிடித்து அப்புறப்படுத்தினார். இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.