தென்காசி: விபத்திலிருந்து தப்பித்தவர்; வைரல் வீடியோ

52பார்த்தது
தென்காசி மாவட்டம் கடையம் அருகே மேட்டூர் பகுதியில் மினி பேருந்தில் சிக்கிய ஓய்வு பெற்ற மின் ஊழியர் சிறு காயங்களுடன் உயிர் தப்பிய பரபரப்பு சிசிடிவி காட்சி வைரல் ஆகி வருகிறது. 

தென்காசி மாவட்டம் மேட்டூர் பகுதியைச் சேர்ந்தவர் வில்சன். மின்சாரத் துறையில் மின்சார ஊழியராகப் பணிசெய்து கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு ஓய்வு பெற்றுள்ளார். ஓய்வு பெற்ற வில்சன் இன்று (மார்ச் 27) தனது குடும்பத்திற்கு வேண்டிய மளிகைச் சாமான்கள் வாங்குவதற்காக மேட்டூர் இரயில்வே கேட் பகுதியில் உள்ள ஒரு மளிகைக் கடையில் சென்று பொருட்கள் வாங்கிக் கொண்டு தனது இருசக்கர வாகனத்தில் ஏறி திரும்பும் போது அவ்வழியாக கடையத்தில் இருந்து பாவூர்சத்திரம் நோக்கி வந்த மினி பேருந்தின் முன்பக்கம் சிக்கி இருசக்கர வாகனம் எதிர்பாராத விதமாக விபத்துக்குள்ளாகியது. 

இந்நிலையில் இந்த விபத்தில் சிக்கிய வில்சன் சிறுசிறு காயங்களுடன் உயிர் தப்பினார். மேலும் இந்த விபத்து குறித்து சிசிடிவி காட்சிகள் இணையத்தில் தற்போது வைரல் ஆகி வருகிறது. இச்சம்பவம் மேட்டூர் பகுதி மக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.