தென்காசி மாவட்டம், புளியங்குடி நகராட்சி பகுதிகளில் பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்த வளர்ச்சித்திட்டப் பணிகளை நேற்று (05.06.2025) மாவட்ட ஆட்சித் தலைவர் ஏ.கே. கமல் கிஷோர் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். பணிகள் தரமானதாக இருக்கிறதா என்பதை ஆய்வு செய்த ஆட்சியர் விரைந்து பணிகளை முடிக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.