தென்காசி இ.சி.ஈ. அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் நேற்று (14.04.2025) அண்ணல் அம்பேத்கர் அவர்களின் 135வது பிறந்த நாளினை முன்னிட்டு சமத்துவ நாள் விழா நடைபெற்றது.
தென்காசி நாடாளுமன்ற உறுப்பினர் திரு. ராணி ஸ்ரீகுமார், தென்காசி சட்டமன்ற உறுப்பினர் எஸ். பழனிநாடார், சங்கரன்கோவில் சட்டமன்ற உறுப்பினர் ஈ. ராஜா அவர்கள், வாசுதேவநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் திரு. சதன் திருமலைக்குமார் ஆகியோர் முன்னிலையில் மாவட்ட ஆட்சித்தலைவர் ஏ.கே. கமல்கிஷோர் தலைமையில் சமத்துவ நாள் உறுதிமொழியை அனைத்து அலுவலர்களும் ஏற்றுக்கொண்டனர். மேலும் பயணிகளுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சித்தலைவர், நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள் வழங்கினர்.