ஆலங்குளம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட, கீழப்பாவூர் பேரூர் பாகமுகவர்கள் கலந்துரையாடல் கூட்டம் இன்று (டிச.29) கீழப்பாவூரில் நடைபெற்றது. வார்டு வாரியாக 4 கீழப்பாவூர் கீரைதோட்ட தெரு, பி. ரா. சிவன் திருமணமண்டபம், எஸ். கே. டி. திருமண மண்டபம், அடைக்கலபட்டணம் சர்ச் வளாகம் ஆகிய 4 இடங்களில் நடைபெற்ற இக்கூட்டத்திற்கு பேரூர் செயலாளர் ஜெகதீசன் தலைமை வகித்தார். மாவட்ட பிரதிநிதி பொன். செல்வன் முன்னிலை வகித்தார்.
தென்காசி தெற்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் வே. ஜெயபாலன், சட்டமன்ற தொகுதி தேர்தல் பார்வையாளர் கணேஷ்குமார் ஆதித்தன் ஆகியோர் கலந்து கொண்டு ஆலோசனைகளை வழங்கி பேசினர். இக்கூட்டத்தில், மாவட்ட நெசவாளர் அணி அமைப்பாளர் ராஜாமணி, முன்னாள் பேரூர் செயலாளர் வேலாயுதம், ஒன்றிய பொருளாளர் அன்பரசு, மாவட்ட பிரதிநிதி தங்கப்பாண்டியன், பேச்சாளர் தமிழ்செல்வன், வார்டு செயலாளர்கள் கோபாலகிருஷ்ணன், நரசிங்கம், மலைச்சாமி, மாடசாமி, ஸ்ரீதரன், தங்கேஸ்வரன், அழகேசன், மதியழகன், மாரியப்பன், சுப்பிரமணியன், இராமசாமி, பெரியசாமி, சுரேஷ், ஜெயக்குமார், வார்டு கவுன்சிலர்கள் இசக்கிமுத்து, தேவ அன்பு, இளைஞரணி ராஜேஷ், பாக முகவர்கள் ஆறுமுக நயினார், பழனி, ரவிச்சந்திரன், மாரியப்பன், புதிய பழனி, ராம கிருஷ்ணன், ராமசாமி, சுப்பிரமணியன், பாரதிராஜா, அருள், சுப்பையா, ஆசைதம்பி, உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.