தென்காசி மாவட்டம், தென்காசி அருள்தரும் உலகம்மன் உடனுறை காசி விஸ்வநாத சுவாமி கோயிலில் மாசிமகப் பெருவிழா தேரோட்டம் கடந்த 21 ஆம் தேதி குடியேற்றத்துடன் நடைபெற்றது. விழா நாட்களில் தினமும் சிறப்பு அபிஷேகம், தீபாராதனை மற்றும் சுவாமி-அம்பாள் பல்வேறு வாகனங்களில் வீதியுலா நடைபெற்றது. விழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம் 9ஆம் நாள் கோலாகலமாக நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.