ரோட்டரி கிளப் ஆப் குற்றாலம் மெட்ரோவின் புதிய நிர்வாகிகள் பதவியேற்பு விழா தென்காசி ரயில் நிலையம் எதிரில் உள்ள ஸ்ரீ நம்பி கிருஷ்ணா ஹாலில் நேற்று நடைபெற்றது. தலைவராக என்.வெங்கடேஸ்வரன், செயலாளராக முத்துக்குமாரசுவாமி, பொருளாளராக சந்திரதாஸ் ஆகியோர் பதவி ஏற்றுக்கொண்டனர்.
சிறப்பு விருந்தினர்களாக டாக்டர் விஜயகுமார், டாக்டர் சேக் சலீம், தென்காசி நகராட்சித் தலைவர் ஆர்.சாதிர் ஆகியோர் கலந்துகொண்டனர். தென்காசி தெற்கு மாவட்ட அதிமுக செயலாளர் இராம் உதயசூரியன் புதிய நிர்வாகிகளை வாழ்த்திப் பேசினார்.