தென்காசி: பழைய குற்றாலத்தில் பழனி நாடார் எம்எல்ஏ ஆய்வு

61பார்த்தது
தென்காசி: பழைய குற்றாலத்தில் பழனி நாடார் எம்எல்ஏ ஆய்வு
தென்காசி மாவட்டம் பழைய குற்றாலம் அருவிப்பகுதியில் பொதுப் பணித்துறையினர் மற்றும் ஆயிரப்பேரி ஊராட்சி மூலம் எழுதி வைத்திருந்த பல்வேறு அறிவிப்புகளை பெயிண்ட் மூலம் வனத்துறையினர் அழித்து விட்டனர். மேலும் காமராஜர் காலத்தில் பழைய குற்றால அருவி 1960ம் ஆண்டு திறக்கப்பட்டபோது வைக்கப்பட்ட கல்வெட்டையும் வனத்துறையினர் அகற்றி விட்டதாகவும் சமூக வலைதளங்களில் தகவல் பரவியது. 

இதனைத் தொடர்ந்து இன்று தென்காசி சட்டமன்ற உறுப்பினர் எஸ். பழனிநாடார், பழைய குற்றாலம் அருவிப்பகுதிக்கு சென்று நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். அப்போது வனச்சரகர் செல்லத்துரை பாண்டியன் எம்எல்ஏவிடம் 'கல்வெட்டு எதுவும் அகற்றப்படவில்லை. சமூக வலைதளங்களில் தவறாக தகவல் பரவுகிறது' என்ற விபரத்தை எடுத்துரைத்தார். அதனைத்தொடர்ந்து சட்டமன்ற உறுப்பினர் எஸ். பழனிநாடார், பழைய குற்றாலத்தில் வழக்கம்போல் இரவு நேரமும் பொதுமக்கள் குளிக்க அனுமதிக்க வேண்டும். பழைய குற்றாலத்திற்கு வருகை தரும் சுற்றுலா பயணிகளுக்கும் பொதுமக்களுக்கும் வனத்துறையினர் எவ்வித இடையூறும் செய்யக்கூடாது என்பதை வலியுறுத்தினார். அப்போது தென்காசி மாவட்ட பஞ்சாயத்து துணைத் தலைவர் தி. உதயகிருஷ்ணன், ஆயிரப்பேரி ஊராட்சி மன்றத் தலைவர் தி. சுடலையாண்டி, வனச்சரக அலுவலர் செல்லத்துரை, குற்றாலம் பிரிவு வனவர் சங்கர்ராஜா, மற்றும் சண்முகவேல், பிரபாகரன் ஆகியோர் உடன் இருந்தனர்.

தொடர்புடைய செய்தி