வீரவநல்லூரில் உறவினர் திருமணத்திற்கு சென்ற தம்பதியினர் வீட்டில் இல்லாதபோது, ஹிஜாப் அணிந்த மர்ம நபர் ஒருவர் வீட்டில் இருந்த 85 வயது மூதாட்டியை தாக்கி, பீரோவில் இருந்த 26 பவுன் தங்க நகை மற்றும் ரூ. 7 லட்சத்தை கொள்ளையடித்துச் சென்றார். புகாரின்பேரில் போலீசார் விசாரணை நடத்தி வரும் நிலையில், கொள்ளை நடந்த வீட்டிற்கு அருகே சனிக்கிழமை அதிகாலை கண்டெடுக்கப்பட்ட சாக்கு மூட்டையில் கொள்ளை போன நகை, பணம் இருந்தது. போலீசார் அதை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.