சங்கரன்கோவிலில் தெப்ப தேரோட்டமானது சிறப்பாக நடைபெற்றது.

1பார்த்தது
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருள்மிகு சங்கரநாராயண சுவாமி திருக்கோவிலில் ஆண்டுதோறும் தைமாத கடைசி வெள்ளிக்கிழமை அன்று நடைபெறும் தெப்ப தேரோட்டம் இந்த ஆண்டு சிறப்பாக நடைபெற்றது. இதில், அருள்மிகு சங்கரநாராயண சுவாமி மற்றும் கோமதி அம்மன், ஆவுடை பொய்கை தெப்பத்தில் அலங்கரித்து வைக்கப்பட்ட தேரில் பவனி வந்து பக்தர்களுக்கு காட்சியளித்தனர். இந்த நிகழ்வில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

தொடர்புடைய செய்தி