தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே, பெருங்கோட்டூர் புதுமனை தெருவைச் சேர்ந்த பிரவீன் (24) என்பவரை, சமூக வலைதள செயலி மூலம் அறிமுகமான சங்கரன்கோவில் சேர்ந்த முகம்மது காதி (18) மற்றும் அவரது நண்பர்கள் உள்ளிட்ட 6 பேர் நேற்று இரவு சங்கரன்கோவிலுக்கு வரவழைத்துள்ளனர். பிரவீனுடன் ஓரினச்சேர்க்கையில் ஈடுபட்டபோது ஏற்பட்ட வாக்குவாதத்தில் மோதல் முற்றியுள்ளது. இதில், முகம்மது காதி மற்றும் அவரது நண்பர்கள் பிரவீனை தாக்கி வெள்ளி செயினை பறித்து தப்ப முயன்றனர். பொதுமக்கள் முகம்மது காதி மற்றும் சங்கரன்கோவில் சேர்ந்த கதிர்வேல் (17) ஆகிய இருவரை மடக்கிப் பிடித்து சங்கரன்கோவில் டவுன் போலீசாரிடம் ஒப்படைத்தனர். போலீசார் இருவரையும் கைது செய்து, தப்பியோடிய மற்ற 4 பேரைத் தேடி வருகின்றனர்.