நாகல்குளம் சிமெண்ட் சாலைக்கு யூனியன் சேர்மன் அடிக்கல்

484பார்த்தது
நாகல்குளம் சிமெண்ட் சாலைக்கு யூனியன் சேர்மன் அடிக்கல்
கீழப்பாவூர் ஊராட்சி ஒன்றியம், நாகல்குளம் ராஜா தெருவில் ரூ. 9 லட்சம் மதிப்பீட்டில் சிமெண்ட் சாலை அமைக்கும் பணிக்கான அடிக்கல் நாட்டு விழா நேற்று (ஆகஸ்ட் 20) நடைபெற்றது. யூனியன் சேர்மன் காவேரிசீனித்துரை தலைமை வகித்து, அடிக்கல் நாட்டி பணிகளை தொடங்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில் ஒன்றிய கவுன்சிலர் ராதாகுமாரி மாரிமுத்து, மாவட்ட திமுக விளையாட்டு மேம்பாட்டு அணி துணை அமைப்பாளர் மாஸ்டர் கணேஷ், திமுக கிளை செயலாளர் காசிபாண்டி. மணி, ராஜசேகர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். முடிவில் மாரிமுத்து நன்றி கூறினார்.

தொடர்புடைய செய்தி