சங்கரன்கோவில்: மின்சாரம் தாக்கி வாலிபர் பலி.. பொதுமக்கள் சாலை மறியல்

1050பார்த்தது
சங்கரன்கோவில் அருகே மலையடிப்பட்டி கிராமத்தில், பெருமாள்சாமி மகன் மாரிமுத்து (24) என்பவர் டிராக்டர் மூலம் விவசாய நிலத்தில் உழவு செய்து கொண்டிருந்தபோது, மின் ஒயர் உராய்வு ஏற்பட்டு மின்சாரம் தாக்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இந்த துயர சம்பவத்தை அடுத்து, உயிரிழந்த மாரிமுத்து குடும்பத்திற்கு ரூ.25 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும், குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, கரிவலம்வந்தநல்லூர் காவல் நிலையம் முன்பு சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது.