தென்காசி மாவட்டத்தில், கொலை முயற்சி, சொத்து சேதம் மற்றும் வெடிபொருள் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட பாப்பாகுடி அருண்பாண்டியன், அரவிந்த், மருதம்புத்தூர் சாமி மற்றும் மாரியப்பன் ஆகிய நான்கு குற்றவாளிகள் மீது தமிழ்நாடு குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மாதவனின் பரிந்துரையின் பேரில், மாவட்ட ஆட்சியர் கமல் கிஷோர் இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளார். இதன் மூலம், இந்த நான்கு பேரும் குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளனர்.