தென்காசி: கஞ்சா கடத்தி வந்த 5 போ் கைது

654பார்த்தது
தென்காசி: கஞ்சா கடத்தி வந்த 5 போ் கைது
தென்காசி குத்துக்கல்வலசையில் வாகன சோதனையின் போது, கஞ்சா கடத்தி வந்த லாரியை காவல்துறையினர் மடக்கிப் பிடித்தனர். இந்த சம்பவத்தில் நெட்டூர் பகுதியைச் சேர்ந்த இசக்கி குமார் (31), பேச்சிமுத்து (32), அம்பாசமுத்திரம் பகுதியைச் சேர்ந்த நைனார் விக்னேஷ் (32), ராஜாராம் கோபி (26) மற்றும் அய்யனார்குளம் பகுதியைச் சேர்ந்த மனோ ரஞ்சித் (21) ஆகிய ஐந்து பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் இருந்து 10 கிலோ கஞ்சா, ஒரு பைக், ஒரு கார், லாரி மற்றும் கைப்பேசிகளும் பறிமுதல் செய்யப்பட்டன.

தொடர்புடைய செய்தி