தென்காசி மாவட்ட ஆட்சியா் அலுவலக கூட்டரங்கில் நடைபெற்ற மக்கள் குறைதீா் கூட்டத்தில் மாவட்ட ஆட்சியா் ஏ. கே. கமல்கிஷோா் தலைமை வகித்து பொதுமக்கள், மாற்றுத்திறனாளிகளிடம் இருந்து 692 கோரிக்கை மனுக்களை பெற்றாா். இதில் இலவச வீட்டுமனை பட்டா, முதியோா் உதவித்தொகை, அடிப்படை வசதிகள், பட்டா மாறுதல், மாற்றுத் திறனாளிகள் உதவித்தொகை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் அடங்கும். பெறப்பட்ட மனுக்கள் மீது விசாரணை நடத்தி விரைந்து நடவடிக்கை எடுக்கவும், மனுதாரா்களுக்கு உரிய பதிலளிக்கவும் அனைத்துத் துறை அலுவலா்களுக்கும் ஆட்சியா் அறிவுறுத்தினாா்.