தென்காசி மாவட்டம் கடையத்தை சேர்ந்த செல்வகணேஷ், தென்காசி சாலையில் டீ குடித்துக் கொண்டிருந்தபோது, 17 வயது கல்லூரி மாணவர் ஒருவர் அரிவாளால் வெட்டி படுகாயப்படுத்தினார். அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட செல்வகணேஷ் குறித்த விசாரணையில், கோயில் திருவிழாவில் ஏற்பட்ட முன்விரோதம் காரணமாக இந்த தாக்குதல் நடந்ததாக தெரியவந்தது. கடையம் போலீசார் கல்லூரி மாணவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.