பதவியை ராஜினாமா செய்த ஆலங்குளம் எம்எல்ஏ

5பார்த்தது
பதவியை ராஜினாமா செய்த ஆலங்குளம் எம்எல்ஏ
ஆலங்குளம் அதிமுக சட்டமன்ற உறுப்பினர் மனோஜ் பாண்டியன் இன்று (நவம்பர் 4) தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்தார். இதையடுத்து மனோஜ் பாண்டியன் தனது பதவியை ராஜினாமா செய்தார். சட்டப்பேரவையில் சபாநாயகர் அப்பாவுவை சந்தித்து ராஜினாமா கடிதத்தை வழங்கினார். முன்னதாக திமுகவில் இணைந்த பிறகு இன்று மாலை எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்வேன் என அவர் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.