தென்காசி மாவட்டம் தென்காசி அருகே உள்ள பண்பொழி திருமலைக்குமாரசாமி திருக்கோவிலில் இன்று காலை ஏழாம் ஆண்டு வருடாபிஷேக விழா வெகு விமரிசையாக நடைபெற்றது. காலை 10 மணியில் இருந்து அனுக்ஜை, விக்னேஸ்வர பூஜை, புண்யாகவாசனம், கும்பபூஜை, மஹா பூர்ணாஹூதி, மற்றும் தீபாராதனை நடைபெற்றன. தொடர்ந்து யாகசாலையில் இருந்து புனித நீர் எடுத்துச் செல்லப்பட்டு, கோவில் வளாகத்தில் நான்கு ரதவீதிகளில் வலம் வந்து, மூலஸ்தானம் மற்றும் பரிவார மூர்த்திகள், விமானங்களுக்கு புனித நீர் ஊற்றப்பட்டது. இந்த விழா பல்வேறு சிறப்பு பூஜைகளுடன் கோலாகலமாக கொண்டாடப்பட்டது.