தென்காசி மாவட்டம் குற்றாலம் காப்புக்காடு அருகிலுள்ள மலையடிவார பகுதியில் நேற்று காலை தாயை பிரிந்த ஆண் குட்டி யானை ஒன்று வழிதவறி சுற்றித்திரிந்தது. இதுகுறித்து தகவல் அறிந்த மாவட்ட வன அலுவலர் உத்தரவின் பேரில், வன கால்நடை மருத்துவர் மனோகரன் மற்றும் சாந்தகுமார் தலைமையிலான மருத்துவக் குழுவினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று குட்டி யானையை லாவகமாக பிடித்து முதலுதவி சிகிச்சை அளித்தனர். குட்டியை பிரிந்த யானைக் கூட்டம் அதே பகுதியில் சுற்றித்திரிவது தெரியவந்தது.