தென்காசி மாவட்டம் குற்றாலம் அருவிகளில் 7 நாட்களுக்குப் பிறகு சுற்றுலாப் பயணிகளுக்கு குளிக்க மாவட்ட நிர்வாகம் அனுமதி அளித்துள்ளது. தொடர் மழையால் அருவிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டிருந்ததால் பாதுகாப்பு காரணங்களுக்காக தடை விதிக்கப்பட்டிருந்தது. தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்து வரும் நிலையில் கடந்த ஒரு வாரமாக கனமழை வெளுத்து வாங்கி வருகிறது. கோவை, நீலகிரி, தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி மாவட்டங்களில் மழை நீடிப்பதோடு, நீர் நிலைகளில் தண்ணீர் வரத்தும் அதிகரித்துள்ளது.