தென்காசி மாவட்டம் குற்றாலம் அருவிகளில் வெள்ளப்பெருக்கு காரணமாக சுற்றுலாப் பயணிகள் குளிக்க சனிக்கிழமை 2ஆவது நாளாகவும், ஞாயிற்றுக்கிழமை 3ஆவது நாளாகவும் தடை நீட்டிக்கப்பட்டுள்ளது. வடகிழக்கு பருவமழை காரணமாக இப்பகுதியில் தொடர் மழை பெய்து வருவதால் அருவிகளில் தண்ணீர் வரத்து குறையவில்லை. இதனால் பேரருவி, ஐந்தருவி உள்ளிட்ட அனைத்து அருவிகளிலும் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.