தென்காசி நகர மையப் பகுதியில் உள்ள காசி விஸ்வநாதர் கோவிலில் திருக்கல்யாண திருவிழாவை முன்னிட்டு இன்று காலை தேரோட்டம் நடைபெற்றது. அம்மனுக்கு சிறப்பு அபிஷேகங்கள், அலங்காரங்கள் மற்றும் தீபாராதனை நடத்தப்பட்டது. அலங்கரிக்கப்பட்ட அம்மன் தேரில் எழுந்தருளி, நான்கு ரத வீதிகளிலும் பக்தர்கள் கோஷங்கள் முழங்க தேர் இழுக்கப்பட்டது. தென்காசி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த பொதுமக்கள் இதில் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.