தென்காசி நகராட்சி பகுதிகளில் பொதுமக்களுக்கும், போக்குவரத்திற்கும் இடையூறு ஏற்படுத்தும் தெரு நாய்களைக் கட்டுப்படுத்தும் நோக்கில், ஏற்கெனவே 821 நாய்களுக்கு கருத்தடை அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது. தமிழக அரசின் உத்தரவின் பேரில், தென்காசி-ஆய்க்குடி சாலையில் உள்ள தெரு நாய்களுக்கான கருத்தடை அறுவை சிகிச்சை மையத்தில் அரசு கால்நடை மருத்துவர்களைக் கொண்டு பணிகள் தொடங்கின. தென்காசி நகர்மன்றத் தலைவர் ஆர். சாதிர் தலைமையில், மாவட்ட கால்நடை பராமரிப்புத் துறை இணை இயக்குநர் கோவில் ராஜா முன்னிலையில் இப்பணிகள் தொடங்கின.