குடும்ப பிரச்சினை: மகன் பேசாததால் தாய் எடுத்த விபரீத முடிவு

1பார்த்தது
குடும்ப பிரச்சினை: மகன் பேசாததால் தாய் எடுத்த விபரீத முடிவு
தென்காசி மாவட்டம் கடையம் அருகே சேர்வைக்காரன்பட்டியில், மகன் சிபி சக்கரவர்த்தி பேசாததால் மனவேதனையில் தவித்த சந்திரா (55) நேற்று முன்தினம் வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து கடையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். சந்திராவுக்கு சிபி சக்கரவர்த்தி என்ற மகனும், 2 மகள்களும் உள்ளனர். சிபி சக்கரவர்த்தி சென்னையில் பணிபுரிந்து வருகிறார். சந்திராவுக்கு திடீரென பக்கவாத நோய் ஏற்பட்டதால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். புதிய வீடு கட்டுவது தொடர்பாக மகன் பேசாமல் இருந்ததால் தாய் தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது.

தொடர்புடைய செய்தி