தென்காசி: கூட்டத்திற்கு தாமதமாக வந்த அதிகாரிகள்; விவசாயிகள் வெளிநடப்பு

533பார்த்தது
தென்காசி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நேற்று (மே 29) நடைபெற்ற விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டத்தில், கலெக்டர் மற்றும் அதிகாரிகள் தாமதமாக வந்ததால் ஆத்திரமடைந்த விவசாயிகள் கண்டன கோஷங்களை எழுப்பி வெளிநடப்பு செய்து போராட்டத்தில் ஈடுபட்டனர். பூவைய்யா என்ற விவசாயி, கலெக்டர் முன்னிலையில் பூச்சிக்கொல்லி மருந்தை குடித்து தற்கொலைக்கு முயன்றார். அவரை மீட்டு சிகிச்சைக்காக தென்காசி அரசு மருத்துவமனையில் அனுமதிக்க கலெக்டர் உத்தரவிட்டார். தென்காசி போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

தொடர்புடைய செய்தி