வடகிழக்குப் பருவமழை தொடங்கியதிலிருந்து தென்காசி, குற்றாலம், செங்கோட்டை மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் தொடர்ச்சியாக மழை பெய்து வருகிறது. இதன் விளைவாக, குற்றாலம் அருவிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. வெள்ளிக்கிழமை முதல் குற்றாலத்தில் உள்ள பேரருவி மற்றும் ஐந்தருவியில் சுற்றுலாப் பயணிகள் குளிக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து பெய்து வரும் மழையால், குற்றாலம் பேரருவியில் பாதுகாப்பு வளைவைத் தாண்டி நீர் ஆர்ப்பரித்துக் கொட்டுகிறது. பழைய குற்றாலம் அருவியில் ஏற்கனவே பராமரிப்புப் பணிகளுக்காக சுற்றுலாப் பயணிகள் செல்வதற்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது.