தென்காசி மாவட்ட செஞ்சிலுவைச் சங்கம், நாகர்கோவிலில் உள்ள பெஜான்சிங் கண் மருத்துவமனை மற்றும் திப்பணம்பட்டி பாஜக இணைந்து, திப்பணம்பட்டி பாஜக அலுவலகத்தில் ‘நலம் தரும் மோடி’ என்ற பெயரில் பொது மருத்துவ முகாம் நடத்தியது. மாவட்ட மருத்துவ பிரிவு செயலாளர் சேர்மன் தலைமையில் நடைபெற்ற இம்முகாமில், செஞ்சிலுவை சங்க மருத்துவர் மற்றும் பெஜான்சிங் கண் மருத்துவமனை மருத்துவர்கள் சர்க்கரை, இரத்த அழுத்தம், கண் பரிசோதனை மற்றும் பொது மருத்துவ சிகிச்சைகளை வழங்கினர்.