தென்காசியில் மாணவ, மாணவிகளுக்கான ஹாக்கிப் போட்டிகள்

2பார்த்தது
தென்காசியில் மாணவ, மாணவிகளுக்கான ஹாக்கிப் போட்டிகள்
தென்காசி மாவட்டம் பாட்டாக்குறிச்சி மாவட்ட விளையாட்டு வளாகத்தில், இளைஞா் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை, தமிழக விளையாட்டு மேம்பாட்டு ஆணையம், தென்காசி மாவட்டம் சாா்பாக இந்தியாவில் ஹாக்கி விளையாட்டு நூற்றாண்டை எட்டியதைக் கொண்டாடும் வகையில், நவ. 7ஆம் தேதி மாணவ, மாணவிகளுக்கான ஹாக்கிப் போட்டிகள் நடைபெற்றன. ஆண்கள் பிரிவில் 4 அணிகளும், பெண்கள் பிரிவில் 4 அணிகளும் பங்கேற்றன. மாவட்ட காவல் துணைக் கண்காணிப்பாளா் அறிவழகன் சிறப்பு அழைப்பாளராகக் கலந்துகொண்டு பரிசுக் கோப்பைகளை வழங்கினாா். மாவட்ட ஹாக்கி சங்கச் செயலா் பால்மகேஷ், மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞா் நலன் அலுவலா் ராஜேஷ் உள்ளிட்டோரும் கலந்துகொண்டனா்.

தொடர்புடைய செய்தி