தென்காசி மாவட்டம் செங்கோட்டையில் உள்ள எஸ். ஆர். எம். அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் படித்த இஸ்ரோ விஞ்ஞானியும் ஆதித்யா- எல் 1 திட்ட இயக்குநருமான நிகர் ஷாஜி, தான் படித்த பள்ளிக்கு ரூ. 8 லட்சம் நன்கொடை அளித்துள்ளார். மேலும், 'நமக்கு நாமே' திட்டத்தின் கீழ் ரூ. 24 லட்சம் மதிப்பில் புதிய கட்டடம் கட்டப்பட்டது. இக்கட்டடத்தை நேற்று நிகர் ஷாஜி, கலெக்டர் கமல்கிஷோர் இணைந்து திறந்து வைத்தனர். தான் படித்த பள்ளிக்கு ஏதாவது செய்ய வேண்டும் என்ற விருப்பம் நீண்ட நாளாக இருந்ததாகவும், அதை நிறைவேற்ற 'நமக்கு நாமே' திட்டம் உதவியதாகவும் நிகர் ஷாஜி தெரிவித்தார். இஸ்ரோவின் எதிர்கால திட்டங்கள் குறித்தும் அவர் விளக்கினார்.