காசிவிஸ்வநாதர் கோவில் ஐப்பசி திருக்கல்யாண திருவிழா தொடக்கம்

322பார்த்தது
காசிவிஸ்வநாதர் கோவில் ஐப்பசி திருக்கல்யாண திருவிழா தொடக்கம்
தென்காசி நகரின் மையப்பகுதியில் உள்ள காசி விஸ்வநாதர் ஆலயத்தில் ஐப்பசி மாத திருக்கல்யாண திருவிழா கொடியேற்றத்துடன் வெகு விமரிசையாக தொடங்கியது. உலகம்மன் சன்னதியில் உள்ள கொடிமரத்தில் வேத மந்திரங்கள் முழங்க கொடியேற்றப்பட்டது. தொடர்ந்து சிறப்பு அபிஷேகங்கள் செய்யப்பட்டு தீபாராதனை காட்டப்பட்டது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டனர். வரும் 13ஆம் தேதி திருத்தேரோட்டமும், 15ஆம் தேதி திருக்கல்யாண வைபவமும் நடைபெறும். இந்த விழா ஏற்பாடுகளை இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகளும் கட்டளைதாரர்களும் செய்து வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி