தென்காசி மாவட்டம் குற்றாலத்தில் தென்மேற்கு பருவமழை மற்றும் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் பெய்யும் சாரல் மழையின் காரணமாகக் குளு குளு சீசன் அதிகாரப்பூர்வமாகத் தொடங்கியுள்ளது. மெயின் அருவி, ஐந்தருவி, பழைய குற்றாலம் உள்ளிட்ட அனைத்து அருவிகளிலும் தண்ணீர் விழத் தொடங்கியுள்ளதால், பல்வேறு மாவட்டங்களில் இருந்து சுற்றுலாப் பயணிகள் மற்றும் பொதுமக்கள் மகிழ்ச்சியுடன் குளித்து மகிழ்ந்து வருகின்றனர்.