தென்காசி அருகே கட்டிடத்தில் புகுந்த லாரி

730பார்த்தது
தென்காசி அருகே கட்டிடத்தில் புகுந்த லாரி
தென்காசி மாவட்டம் புளியரை வழியாக கேரளாவிற்கு கனிமவளம் ஏற்றிச் செல்லும் கனரக வாகனங்களால் விபத்துகள் தொடர்கின்றன. நேற்று (மே 18) அதிகாலை கடையம் பகுதியிலிருந்து கனிமவளம் ஏற்றி வந்த லாரி ஒன்று பிரானூர் பார்டர் பகுதியில் சாலை ஓரத்தில் இருந்த கட்டிடத்திற்குள் புகுந்ததால், கட்டிட சேதம் ஏற்பட்டு பரபரப்பு ஏற்பட்டது. அதிர்ஷ்டவசமாக, இந்த விபத்தில் யாருக்கும் உயிர் சேதம் ஏற்படவில்லை. இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி