தென்காசி நகரின் மையப்பகுதியில் அமைந்துள்ள வரலாற்று சிறப்புமிக்க அருள்மிகு காசிவிஸ்வநாதர் சுவாமி திருக்கோவிலில், ஆண்டுதோறும் நடைபெறும் மாசி மகத் திருவிழா இன்று காலை கொடியேற்றத்துடன் கோலாகலமாகத் துவங்கியது. இந்த பத்து நாட்கள் நடைபெறும் திருவிழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சுவாமி, அம்பாளை தரிசனம் செய்தனர்.