தென்காசி ரயிலில் அடிபட்டு ஒருவா் பலி: போலீசார் விசாரணை

0பார்த்தது
தென்காசி மாவட்டம், தென்காசி ரயில்வே மேம்பாலத்தின் மேற்புற தண்டவாளத்தில் சுமார் 50-55 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவர் ரயிலில் அடிபட்டு உயிரிழந்த நிலையில் கிடந்தார். தென்காசி கிராம நிர்வாக அலுவலர் மாரிச்செல்வம் அளித்த புகாரின் பேரில், தென்காசி இருப்புப்பாதை காவல் நிலைய உதவி ஆய்வாளர் மாரிமுத்து வழக்குப்பதிந்து விசாரணை மேற்கொண்டார். விசாரணையில், உயிரிழந்தவர் அப்பகுதியில் சில ஆண்டுகளாக வசித்து வந்ததாகவும், அவர் அருப்புக்கோட்டையைச் சேர்ந்தவர் என்றும், வலது கைக்கு கீழ் 'ரமேஷ் வாசுதேவி' என பச்சை குத்தப்பட்டிருப்பதாகவும் தெரியவந்துள்ளது. அவர் எப்படி உயிரிழந்தார் என்பது குறித்து ரயில்வே போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி