தென்காசி கோயிலில் தவசுக் காட்சி நடைபெற்றது

1பார்த்தது
தென்காசி கோயிலில் தவசுக் காட்சி நடைபெற்றது
தென்காசி ஸ்ரீஉலகம்மன் உடனுறை காசிவிஸ்வநாத சுவாமி கோயிலில் ஐப்பசித் திருக்கல்யாணத் திருவிழாவின் முக்கிய நிகழ்வான தவசுக் காட்சி நேற்று மாலை நடைபெற்றது. கடந்த 5ஆம் தேதி தொடங்கிய இந்த விழாவில், நாள்தோறும் சுவாமி-அம்பாளுக்கு அபிஷேகம், அலங்காரம், தீபாராதனை, பல்வேறு வாகனங்களில் அம்பாள் வீதியுலா, மற்றும் நவம்பர் 13ஆம் தேதி தேரோட்டம் ஆகியவை நடைபெற்றன. நேற்று, அம்பாள் தவசுக்காக யானைப்பாலம் தீர்த்தவாரி மண்டபத்துக்கு எழுந்தருளினார். பின்னர், தெற்கு மாசி வீதியில் காசிவிஸ்வநாத சுவாமி உலகம்மனுக்கு தவசுக் காட்சி கொடுத்தார். இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டனர். கோயில் செயல் அலுவலர் பொன்னி தலைமையில் கோயில் பணியாளர்கள் இந்த ஏற்பாடுகளைச் செய்தனர்.

தொடர்புடைய செய்தி