தென்காசி மாவட்டம் தென்காசி அருகே உள்ள குற்றாலம் செண்பகாதேவி அம்மன் கோயிலில், பெளர்ணமி கிரிவலம் பாதை இன்று முதல் பக்தர்களுக்கு அனுமதிக்கப்பட உள்ளது. கோயில் நிர்வாகம் இந்த தகவலை தெரிவித்துள்ளது. கிரிவல நாட்களைத் தவிர மற்ற நாட்களில் வனத்துறை அதிகாரிகளிடம் அனுமதி பெற வேண்டும். நாளை முதல் பக்தர்கள் அம்மனை தரிசனம் செய்யலாம். இதனால் சுற்றுலாப் பயணிகள் மற்றும் பக்தர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.