போலீஸ் எழுத்து தேர்வில் முறைகேடு: பெண் உட்பட 4 பேர் கைது

0பார்த்தது
போலீஸ் எழுத்து தேர்வில் முறைகேடு: பெண் உட்பட 4 பேர் கைது
தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வு வாரியம் நடத்திய இரண்டாம் நிலை போலீஸ் எழுத்துத்தேர்வில், தென்காசி அருகே இலஞ்சி பள்ளியில் தேர்வு எழுதிய கோபிகிருஷ்ணன் என்ற இளைஞர், கேள்வித்தாளை வாட்ஸ்அப்பில் நண்பர்களுக்கு அனுப்பி பதில்களைப் பெற்றார். இது தேர்வு அறை கண்காணிப்பாளரால் கண்டறியப்பட்டு, அவர் போலீசில் ஒப்படைக்கப்பட்டார். கோபிகிருஷ்ணனுக்கு பதில்களை அனுப்பிய நண்பர்கள் பாண்டியராஜன், மல்லிகா மற்றும் பயிற்சி மைய பயிற்சியாளர் பிரதீப் ஆகியோரும் கைது செய்யப்பட்டுள்ளனர். தேர்வு வளாகத்திற்குள் அலைபேசி கொண்டு செல்லப்பட்டதால் பாதுகாப்பு குறைபாடு ஏற்பட்டதாகக் கூறி, இது தொடர்பாக போலீஸ் மீதும் நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது.

தொடர்புடைய செய்தி