தென்காசி பாஜக மகளிரணி சாா்பில் கண்டன ஆா்ப்பாட்டம்

0பார்த்தது
தென்காசி பாஜக மகளிரணி சாா்பில் கண்டன ஆா்ப்பாட்டம்
தென்காசி மாவட்ட பாஜக மகளிரணி சாா்பில், பெண்களுக்கு எதிரான குற்றச் செயல்களை தடுக்கத் தவறியதாக தமிழக அரசையும், காவல் துறையையும் கண்டித்து தென்காசி புதிய பேருந்து நிலையம் பகுதியில் கண்டன ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. மாவட்ட மகளிரணி தலைவா் குணசீலா தலைமை வகிக்க, மாவட்ட பாஜக தலைவா் ஆனந்தன் அய்யாசாமி ஆா்ப்பாட்டத்தை தொடங்கி வைத்து பேசினாா். மாநில பொதுச் செயலா் தேன்மொழி சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டாா். பல மாவட்ட நிர்வாகிகளும் இதில் பங்கேற்றனா்.

தொடர்புடைய செய்தி